Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷாந்த் சர்மாவும், கம்ரான் அக்மலும் சண்டையிட்டுக் கொண்டபோது...!

பெங்களூர்: இந்தியா, பாகிஸ்தான் என்றால் அதிரடி, அடிதடி இல்லாமலா.. பெங்களூரில் நடந்த டுவென்டி 20 போட்டியிலும் நேற்று பொறி கிளம்பியது. ஆனால் நல்லவேளையாக பெரும் சண்டை தவிர்க்கப்பட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. 2 டுவென்டி 20 போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் அது ஆடுகிறது.

முதல் டுவென்டி 20 போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இப்போட்டியில் திரில்லுக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

18வது ஓவரில் முதல் முட்டல்

18வது ஓவரில் முதல் முட்டல்

பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது 18 ஓவரின்போது இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இஷாந்த் சர்மாவுக்கும், கம்ரான் அக்மலுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

கோபத்துடன் பேசிய இஷாந்த்

கோபத்துடன் பேசிய இஷாந்த்

கோபத்துடன் பேசிய இஷாந்த் 18வது ஓவரின் 4வது பந்தில் இஷாந்த் சர்மா வீசிய பந்தை அடித்தார் கம்ரான் அக்மல். அப்போது திடீரென இஷாந்த் சர்மா, கம்ரானை நோக்கி கோபமாகப் பேசினார். பதிலுக்கு கம்ரானும் பேசினார். ஆனால் நடுவர்களும் கேப்டன் டோணியும் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினர்.

பெரிதாக வெடிக்காமல் ஓய்ந்த பிரச்சினை

பெரிதாக வெடிக்காமல் ஓய்ந்த பிரச்சினை

நடுவர்களும், கேப்டன் டோணியும், பிற இந்திய வீரர்களும் இருவருக்கும் இடையே புகுந்து பிரச்சினையை சமாளித்ததால் பிரச்சினை பெரிதாகாமல் அப்படியே தணிந்து போனது. ஆட்டமும் தொடர்ந்தது.

Story first published: Wednesday, December 26, 2012, 12:51 [IST]
Other articles published on Dec 26, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+