டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாளில் பாகிஸ்தான் திணறல்

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி கும்ளே தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற களமிறங்கியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று துவங்கியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சோயப்மாலிக் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சல்மான் பட், யூனிஸ்கான் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். அதற்கடுத்து களமிறங்கிய யூசுப் 27 ரன்களுக்கும், ஹமீது 29 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்த களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சோயப் மாலிக் வந்தவுடன் ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியனுக்கு திரும்பிவிட்டார். பின்னர் மிஸ்பா, கம்ரான் அக்மல் ஜோடி கொஞ்ச நேரம் இணைந்து அசையாமல் விளையாடிக் கொண்டிருந்தது.
இந்த ஜோடியை கேப்டன் கும்ளே பிரித்தார். அவர் அக்மலை 30 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாக்கி வெளியேற்றினார். பின்னர் அடுத்து களமிறங்கிய சோயப் அக்தர், தன்வீர் ஆகியோர் அவுட்டாக பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்தது.
பின்னர் மிஸ்பாவுடன் ஜோடி சேர்ந்த முகமது சமி ஆட்டநேர இறுதிவரை அவுட்டாகமல் இருந்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 85.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியின் மிஸ்பா அபாரமாக விளையாடி 77 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் கேப்டன் கும்ளே 3 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளையும், கங்குலி, முனாப் படேல் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 1 விக்கெடுகளையும் வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications