Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பாட் பிக்ஸிங் விசாரணை.. மும்பை, டெல்லி போலீஸார் 'டிஷ்யூம்.. டிஷ்யூம்'!

Mumbai and Delhi Police
மும்பை: எதிர்பார்த்தது நடந்தே விட்டது. ஐபிஎல் ஸ்பாட் பி்க்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்துவதில் மும்பை போலீஸாருக்கும், டெல்லி போலீஸாருக்கும் இடையே மோதல் முட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளதாம்.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் டெல்லி போலீஸார்தான் முதலில் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள்தான் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரைக் கைது செய்து மும்பையிலிருந்து டெல்லி கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணை ஆதாரங்கள் தொடர்பாக இரு போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம். மும்பையில் ஸ்ரீசாந்த் தங்கியிருந்த ஹோட்டலில் ரெய்டு நடத்தி கைப்பற்றிய ஆதாரங்களை தங்களிடம் வழங்குமாறு மும்பை போலீஸாருக்கு டெல்லி போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அதை ஏற்க மும்பை போலீஸார் மறுத்து விட்டனராம். புக்கி ரமேஷ் வியாஸ் தொடர்பான ஆதாரங்கள் அதில் அடங்கியிருப்பதால் அதைத் தர முடியாது என்று மும்பை போலீஸார் கூறுகின்றனராம்.

இதனால் டெல்லி போலீஸார் டென்ஷனாகியுள்ளனராம். அந்த ஆதாரங்களைப் பெற தொடர்ந்து அவர்கள் முயற்சித்து வருகின்றனராம்.

Story first published: Friday, May 24, 2013, 10:48 [IST]
Other articles published on May 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+