Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

400வது ஒரு நாள் போட்டியில் ஆடுகிறார் ஜெய்வர்த்தனே

போர்ட் ஆப் ஸ்பெயின்: இலங்கை வீரர் மஹளா ஜெயவர்த்தனே தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக அளவில் ஆடிய வீரர்கள் மிகவும் குறைவானவர்களே உள்ளனர். இந்த வரிசையில் தற்போது சேருகிறார் ஜெயவர்த்தனே.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் செல்கான் மொபைல் கோப்பை முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் இன்று ஆடுகின்றன.

சச்சினுடன் இணைகிறார்

சச்சினுடன் இணைகிறார்

இந்தப் போட்டி ஜெயவர்த்தனேவுக்கு 400வது ஒரு நாள் போட்டியாகும். இதன் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், இலங்கையின் சனத் ஜெயசூர்யாவுடன் இணைகிறார் ஜெயவர்த்தனே.

முதலிடத்தில் சச்சின்தான்

முதலிடத்தில் சச்சின்தான்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின்தான். அவர் இதுவரை 463 போட்டிகளில் ஆடியுள்ளார். ஜெயசூர்யா 2வது இடத்தில் 445 போட்டிகளுடன் இருக்கிறார்.

ரெண்டு பேரும் ஓய்வு

ரெண்டு பேரும் ஓய்வு

தற்போது இந்த இரண்டு வீரர்களும் ஓய்வு பெற்று விட்டனர். டெண்டுல்கர் கடந்த ஆண்டும், ஜெயசூர்யா 2011ம் ஆண்டும் ஓய்வை அறிவித்தனர்.

முறியடிக்கப் போவது யார்

முறியடிக்கப் போவது யார்

தற்போது இவர்களது சாதனையை யார் முறியடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1998 முதல்

1998 முதல்

1998ம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறார் ஜெயவர்த்தனே. அவர் 138 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஒரு நாள் போட்டியில் 11,237 ரன்கள்

ஒரு நாள் போட்டியில் 11,237 ரன்கள்

ஜெயவர்த்தனே ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 11,237 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 10,806 ரன்களும் குவித்துள்ளார்.

ரிக்கி பான்டிங்

ரிக்கி பான்டிங்

இந்த வரிசையில், ஜெயவர்த்தனேவுக்குப் பின்னால் 378 போட்டிகளுடன் இன்சமாம் உல் ஹக் மற்றும் 375 போட்டிகளுடன் ரிக்கி பான்டிங் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Thursday, July 11, 2013, 13:23 [IST]
Other articles published on Jul 11, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+