Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடா, ஐ.பி.எல் 6 துவக்கவிழாவில் ஆட ஜெனிபர் லோபஸ் வரலையாமே?

கொல்கத்தா: கொல்கத்தாவில் வரும் ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல் சீசன் 6 துவக்க விழாவில் நடனமாட அமெரிக்க பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் நடனமாட வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், வரும் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி துவங்க இருக்கின்றன.

இதன் துவக்கவிழா நிகழ்ச்சிகள் முதல்நாள் அதாவது ஏப்ரல் 2-ம் தேதி மாலை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

ஷாருக்கான் தொகுக்க

ஷாருக்கான் தொகுக்க

விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளை சென்ற வருடம் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரும், ரெட் சில்லீஸ் குழுவின் நிறுவனரும் ஆன பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

தீபிகா, காத்ரீனா ஆட

தீபிகா, காத்ரீனா ஆட

துவக்கவிழாவில் சிறப்பாக நடனமாட அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான ஜெனிபர் லோபசை அழைத்திருந்தார். இவருடன் இந்தியத் திரை நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, காத்தரீனா கைப் சேர்ந்து நடனம் ஆடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

லோபஸுக்கு டேட்ஸ் ஒத்துவரவில்லை

லோபஸுக்கு டேட்ஸ் ஒத்துவரவில்லை

இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட தேதிகள் ஒத்துவராததால் ஐ.பி.எல். போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் ஜெனிபர் கலந்துகொள்ள மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

போன வாட்டிகேத்தி பெர்ரி வந்தாக

போன வாட்டிகேத்தி பெர்ரி வந்தாக

ஷாருக்கானின் தொடர் முயற்சி பலன் அளித்தால் ஜெனிபர் ஆட வரலாம் என்றும் கூறப்படுகிறது. சென்ற வருடம் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் சீசன் 5 துவக்கவிழா நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனீபர் லோபஸுக்குப் பதில் வேறு யாராச்சும் வருகிறார்களா என்பது தெரியவில்லை.

Story first published: Thursday, March 21, 2013, 15:08 [IST]
Other articles published on Mar 21, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+