Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டேடியத்தில் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்த பத்திரிகையாளர்

மெல்போர்ன்: ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டேடியத்தில் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆண் மற்றும் பெண் செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார்.

Sports journalist watched porn during Australia-West Indies Test

போட்டி நடந்து கொண்டிருக்கையில் அவர் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதை கண்டுபிடித்த கிரிக்கெட் மைதான அதிகாரி ஒருவர் வந்து அவரை ஆபாச படத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் கார்டியன் நாளிதழின் ஸ்போர்ட்ஸ் பிரிவின் துணை ஆசிரியர் ரஸ்ஸல் ஜாக்சன் தனது பிளாக்கில் எழுதியுள்ளார். ஆண்களும், பெண்களும் இருந்த அறையில் அமர்ந்து அநத் பத்திரிக்கையாளர் இப்படி ஆபாச படம் பார்த்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆபாச படம் பார்ப்பதை உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் ஆண் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள் பார்க்கக்கூடும். அதனால் இதை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று கிரிக்கெட் மைதான நிர்வாக அதிகாரி வந்து சொல்ல வேண்டியிருந்திருக்கிறது என்று ஜாக்சன் தனது பிளாக்கில் மேலும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, January 7, 2016, 10:18 [IST]
Other articles published on Jan 7, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+