355ல் ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
நாக்பூர்: நாக்பூரில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸை 355 ரன்களுக்கு இழந்தது. சைமோன் காடிச் சதம் போட்டார்.
நாக்பூரில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 441 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.
இன்று காலை மீண்டும் தனது ஆட்டத்தை அது தொடர்ந்தது. நேற்று 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த காடிச், இன்று சதத்தைப் பூர்த்தி செய்தார். 102 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகிர் கான் பந்து வீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
மைக்கேல் ஹூஸ்ஸி சிறப்பாக ஆடி 90 ரன்களைக் குவித்தார். சதம் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரை விஜய் கிருஷ்ணா ரன் அவுட் செய்தார்.
ஹாடின் 28 ரன்கள் சேர்த்தார். காமரூன் ஒயிட் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி 46 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 355 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது.
ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா, அமீத் மிஸ்ரா தலா 2 விக்கெட்களையும், ஜாகிர்கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா 86 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஒரு ஓவர் வீசப்பட்ட நிலையில், இந்தியா ரன் ஏதும் எடுக்காத நிலையில், இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications