Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆல்ப்ஸ் பனி மலையி்ல் கபில், ஜடேஜா கிரிக்கெட்!

Kapil Dev
மும்பை: ஐரோப்பாவின் உயர்ந்த பனி மலையான ஆல்ப்ஸ் மலையில், இந்திய மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணிகள், கிரிக்கெட் விளையாடவுள்ளன.

ஆல்ப்ஸ் மலையின் 11 ஆயிரத்து 330 அடி உயரத்தில் இந்த இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடவுள்ளன. இது ஒரு காட்சிப் போட்டியாகும்.

இந்திய அணியில் கபில் தேவ், ரோஜர் பின்னி, அனுசுமன் கெய்க்வாட், சந்தீப் பாட்டீல், அஜய் ஜடேஜா ஆகியோர் இடம் பெறுவார்கள். இங்கிலாந்து அணியில் கிறிஸ் போர்டு, ஜான் எம்புரே, டீன் ஜோன்ஸ், ஜெப் ஹௌரத் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மும்பையிலிருந்து கிளம்பி, டெல்லி, லண்டன், ஜூரிச் ஆகிய நகரங்களுக்குச் செல்வார்கள்.

ஜூரிச் நகரம் ஆல்ப்ஸ் மலையின் அடிவார நகரமாகும். அங்கிருந்து ஜங்ப்ரா மலை ரயில் மூலம் போட்டி நடைபெறும் இடத்திற்கு வீரர்கள் பயணமாவர்.

கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு இரு அணிகளும் விளையாடும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:29 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+