Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தகவல் எல்லைக்கு அப்பால் போயிட்டாரே தல... டென்ஷனான கோஹ்லி!

டெல்லி: கேப்டன் டோணிக்கு போனைப் போட்டுள்ளார் விராத் கோஹ்லி... ஆனால் நாட் ரீச்சபிள் என்று வந்ததால் டென்ஷனாகி விட்டாராம் கோஹ்லி.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரை முடித்த கையோடு யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க,, நான் டூர் போறேன் என்று டிவிட் செய்து விட்டு போனார் டோணி.

அமெரிக்காவில் மனைவியுடன் ஹாயாக ஊர் சுற்றிப் பார்த்து விட்டு நாடும் திரும்பி விட்டார். ஆனால் அவரது செல்போனைத் தொடர்பு கொண்டால் இன்னும் நாட் ரீச்சபிள்தான் வருகிறதாம். இதனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் சக வீரர்களும் கூட திணறி வருகின்றனராம்.

வெறுத்துப் போன கோஹ்லி

வெறுத்துப் போன கோஹ்லி

இந்தியாவின் தற்காலிக கேப்டன் விராத் கோஹ்லி, டோணியை செல்லில் முயற்சித்துள்ளார். ஆனால் நாட் ரீச்சபிள் என்றே வருகிறதாம்.

ரொம்பக் கஷ்டமப்பா...

ரொம்பக் கஷ்டமப்பா...

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், டோணி விடுமுறையில் போய் விட்டால் அவரைப் பிடிப்பதே ரொம்பக் கஷ்டம். அவருக்கு மெசேஜ் அனுப்ப முயன்றேன். முடியவில்லை. போன் செய்தால் நாட் ரீச்சபிள் வருகிறது...

சீக்கிரமே பார்த்துருவேன்

சீக்கிரமே பார்த்துருவேன்

இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். விரைவில் அவரைப் பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன். அவரிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார் கோஹ்லி.

ஜிம்பாப்வே நாயகன்

ஜிம்பாப்வே நாயகன்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கோஹ்லி தலைமையில் இந்தியா வென்று அட்டகாசப்படுத்தியது நினைவிருக்கலாம்.

'தல' தப்புவது முதல் முறையல்ல

'தல' தப்புவது முதல் முறையல்ல

ஆனால் இப்படி டோணி நாட் ரீச்சபிள் ஆக இருப்பது இது முதல் முறையல்ல. வி.வி.எஸ்.லட்சுமண் தனது ஓய்வு முடிவை டோணியிடம் தெரிவிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டபோதும் கூட டோணி கிடைக்கவில்லை

ஏம்ப்பா இப்படி...!

ஏம்ப்பா இப்படி...!

டோணி இப்படி அடிக்கடி செல்போனை கிடப்பில் போட்டு விடுவதை பலரும் விமர்சித்துள்ளனர். சக வீரர்களால் கூட தொடர்பு கொள்ள முடியாமல் போகும் அளவுக்கு கேப்டன் இருக்கலாமா என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் டோணி வழிதான் தனி வழியாச்சே....!

Story first published: Thursday, August 8, 2013, 13:25 [IST]
Other articles published on Aug 8, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+