டெல்லி டெஸ்ட்: கும்ப்ளேவுக்கு விரலில் அடி
டெல்லி: டெல்லியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்த அனில் கும்ப்ளேவின் சுண்டு விரலில் அடிட்டு காயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. மாத்யூ ஹெய்டன் பேட் செய்து கொண்டிரு்நதார். அமீத் மிஸ்ரா பந்து வீசினார்.
அப்போது மிட் விக்கெட்டில் நின்று பீல்டிங் செய்த கேப்டன் கும்ப்ளே, ஹெய்ட்ன் அடித்த பந்தை பிடிக்கத் தாவினார். அப்போது, அவரது சுண்டு விரலில் பலத்த அடிபட்டது.
ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தையல் போடப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications