Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 2 ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுத்ததே தோல்விக்கு காரணம்: டோணி

Dhoni
ராஜ்கோட்: இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதற்கு காரணம் கடைசி 2 ஓவர்களில் கூடுதல் ரன்களைக் கொடுத்ததுதான் என்று கேப்டன் டோணி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக வைத்தது. இந்த ஸ்கோரை நன்றாக சேஸ் செய்து கடைசியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இந்தப் போட்டி தொடர்பாக ராஜ்கோட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய டோணி, கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்து அணியை 38 ரன்கள் அடிக்க விட்டு வேடிக்கை பார்த்ததுதான் தோல்விக்குக் காரணமாகி விட்டது. நன்றாக சேஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில் நான் அவுட் ஆனது வேதனையைத் தந்தது. இன்னும் இரண்டு ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பேன் என்றார் அவர்.

Story first published: Saturday, January 12, 2013, 18:18 [IST]
Other articles published on Jan 12, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+