Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேங்க்ஸ் தலைவா... டோணி குறித்து பெருமிதத்தில் பிராவோ

மும்பை: கேப்டன் பொறுப்பு என்றால் என்ன, எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து டோணியிடமிருந்து நிறைய கற்ஏறுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் வேயன் பிராவோ.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலக்கல் வீரர்களில் ஒருவர்தான் பிராவோ. நடப்புத் தொடரிலும் இவர் கலக்கி வருகிறார். அதை விட இவரது டான்ஸும் பிரபலமாகி விட்டது.

தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் பிராவோ. இதற்காக டோணிக்கு நன்றி கூறுகிறார் பிராவோ... ஏனாம்.. அதையும் பிராவோ வாயாலேயே கேட்போம்.

சூப்பர் கேப்டன் தலைவா...

சூப்பர் கேப்டன் தலைவா...

டோணி ஒரு அருமயான கேப்டன். பீல்டிலும், பீல்டுக்கு வெளியிலும் அவரது நடத்தை மிகச் சிறப்பானது. நிறைய கற்றுக் கொண்டேன் அவரிடம்.

அவரிடம் பேசுவதே சந்தோஷம்

அவரிடம் பேசுவதே சந்தோஷம்

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டோணியிடம் பேசிக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முடியும்.

நேருக்கு நேர் சந்திப்பு திரில்லானதுதான்...

நேருக்கு நேர் சந்திப்பு திரில்லானதுதான்...

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி தலைமையில் விளையாடுகிறேன். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டோணியை எதிர்த்து எனது அணி கேப்டனாக சந்திக்கப் போகிறேன். நினைத்தாலே திரில்லாக இருக்கிறது.

இத இத எதிர்பார்க்கவே இல்லை

இத இத எதிர்பார்க்கவே இல்லை

எனக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தேர்வாளர்களின் முடிவுக்கு நன்றி சொல்கிறேன். அதேசமயம், இந்த சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனது அணியில் நிறைய திறமையாளர்கள் உள்ளனர். அவர்களை லீட் செய்யவுள்ளேன்.. சந்தோஷமாக இருக்கிறது.

ஒருங்கிணைந்து ஆடினால் கலக்கலாம்

ஒருங்கிணைந்து ஆடினால் கலக்கலாம்

மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ரவி ராம்பால், சுனில் நரைன், போலார்ட் என பல திறமையாளர்கள் உள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து ஆடினாலே போதும் கலக்கி விடலாம்.

எனக்கு லாராதான் பிடிக்கும்

எனக்கு லாராதான் பிடிக்கும்

எனக்குப் பிடித்த வீரர்கள் என்றால் அது லாராவும், ஜேக்கஸ் கல்லிஸும்தான். அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கீரன் போலார்டும் அருமையான வீரர். சிறந்த ஆல்ரவுண்டர் அவர். போலார்டுடன் இணைந்து ஆடுவது மகிழ்ச்சிக்குரியது என்றார் பிராவோ.

Story first published: Tuesday, May 7, 2013, 14:19 [IST]
Other articles published on May 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+