Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை சீண்டாமல் அப்படியே விடுவதுதான் நல்லது.. கும்ப்ளே

Anil Kumble
பெங்களூர்: சச்சின் டெண்டுல்கரை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதற்கு முற்றிலும் தகுதியானவர் அவர். தற்போதையை சரிவை வென்று மேலும் அவர் பல சாதனைகளைப் படைப்பார் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனது பேட்டிங் சரிவிலிருந்து நிச்சயம் சச்சின் மீளுவார். தனது விமர்சகர்களுக்கு அவர் சரியான பதிலடி தருவார். கடந்த காலங்களில் ஜஸ்ட் லைக் தட் சாதனைகளைப் படைத்தது போல இதையும் அவர் நிச்சயம் செய்வார். எனக்கு நம்பிக்கை உள்ளது.

தற்போது அவரை அனைவரும் சீண்டாமல் அப்படியே விடுவதுதான் நல்லது. அவரை மதிக்க வேண்டும். காரணம், யாரும் அவரைப் போன்று ஆடியதில்லை. 192 டெஸ்ட் போட்டிகள், 34,000 ரன்கள், 100 சதங்கள் .. இதை நிச்சயம் யாராலும் சாதிக்க முடியாது, செய்ய முடியாது. அதை உணர வேண்டும். எனவே அவசரப்பட்டு அவரை நோக்கி விரல்களை சுட்டக் கூடாது என்றார அவர்.

இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 187வது வீரர் சச்சின். கடைசியாக இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் ஆட வந்தவர் வினய் குமார். அவர் 274வது வீரர். சச்சினுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆட வந்த 87 வீரர்களில் 60 சதவீதம் பேர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் சச்சின் இன்னும் விளையாடி வருகிறார். இதிலிருந்தே அவருக்கு கிரிக்கெட் மீதுள்ள காதல், ஆர்வம், ஈடுபாடு, அக்கறையை உணர்ந்து கொள்ளலாம். அவர் படைத்துள்ள சாதனைகளையும் மறந்து விடக் கூடாது என்றார் கும்ப்ளே.

Story first published: Friday, November 30, 2012, 12:34 [IST]
Other articles published on Nov 30, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+