
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பி பிரிவை சேர்ந்த இந்தியாவின் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொண்ணப்பா ஜோடி, சிங்கப்பூரின் லீ யோ, ஷின்டா முலியா சாரி ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 34 நிமிடங்களில் 21-16, 21-15 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றது. ஆனால் பி பிரிவில் இந்தியா பெற்ற வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் 3வது இடத்தை பெற்றது. இதனால் அடுத்த சுற்றிற்கு முன்னேற முடியாமல் இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.
இதன்மூலம் பாட்மிண்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிப்போனது.