Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மொத போட்டியிலேயே இப்படிப் போட்டு அமுக்கிட்டாங்களேப்பா கோஹ்லி...!

கிங்ஸ்டன்: வம்புக் கோழி, சண்டைக்கோழி.. இப்படி நிறைய செல்லப் பெயர்கள் விராத் கோஹ்லிக்கு.. ஐபிஎல் போட்டியில் கூட பார்த்தோமே... அவரது தலைமையில் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய இந்தியாவை, இலங்கை அணி மொத்து மொத்தென்று மொத்தி அனுப்பியிருப்பது ரசிகர்களை கை மற்றும் கால் நகங்களையெல்லாம் சேர்த்துக் கடிக்க வைத்துள்ளது.

நேற்று நடந்த போட்டியைப் பார்த்த இந்திய ரசிகர்கள் நம்மாளுகளாய்யா இப்படி என்று ரத்தக்கண்ணீர் வடித்ததைப் பார்க்க முடிந்தது.

மொத்தமும் சொதப்பல். பவுலிங் ஓட்டை.. பேட்டிங்கில் கோட்டை என்று வயிறுகளை கலக்க வைத்து விட்டனர் இந்திய அணியினர்.

அதாவது டோணிக்கு உடம்பு சரியில்லை...

அதாவது டோணிக்கு உடம்பு சரியில்லை...

கேப்டன் டோணிக்கு உடம்பு சரியில்லை.. சரி என்று கோஹ்லியைப் பிடித்துக் கேப்டனாக்கினர்.

இதுதானே முதல் போட்டி...

இதுதானே முதல் போட்டி...

கோஹ்லி இதுவரை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை. இதுதான்அவருக்கு முதல் போட்டி. முதல் போட்டியிலேயே முக்காடு போட்டு விட்டுட்டாங்க இலங்கை வீரர்கள் என்பதுதான் இதில் ஹைலைட்.

என்ன விளையாட்டு இது...?

என்ன விளையாட்டு இது...?

நேற்று நம்மாளுக ஆடிய விதத்தைப் பார்த்தபோது என்ன விளையாட்டு இது என்றுதான் கேட்கத் தோன்றியது. பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி.. குட்டையைக் குழப்பி குப்புறக் கவுந்துட்டாங்கப்பா....

கோஹ்லி என்ன சொல்றாருன்னா..

கோஹ்லி என்ன சொல்றாருன்னா..

போட்டிக்குப் பின் மைகைக் பிடித்த கோஹ்லி... வெல்.. இது ரொம்ப கஷ்டமான நாள். எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே.. பந்தை நாங்கள் சரியாக வீசவில்லை. தரம் இல்லை. இலங்கையர்கள் நன்றாக பேட் செய்தார்கள். நாங்கள் பேட் செய்யவில்லை.

வேகமாக அடிச்சாதானே...

வேகமாக அடிச்சாதானே...

349 என்ற இலக்கை எட்ட வேண்டுமானால் வேகமாக அடித்து ஆடவேண்டும். நாங்கள் அடித்து ஆட வில்லை. அதை செய்ய முடியாமல் போய் விட்டது. அது எங்களுக்குக் கை கொடுக்கவில்லை....

செக்கப் பண்ணனுமோ...

செக்கப் பண்ணனுமோ...

இது எங்களுக்கு ரியாலிட்டி செக் செய்ய வேண்டிய நேரம். என்ன தப்பு செய்தோம் என்பதை அலசி ஆராய வேண்டும். இன்னும் 2 போட்டிகள் உள்ளன. இந்தத் தோல்வி எங்களவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.. என்றார் கோஹ்லி.

ஏம்ப்பா பேச்சை லைட்டா குறைக்கலாம்ல...!

ஏம்ப்பா பேச்சை லைட்டா குறைக்கலாம்ல...!

கோஹ்லிக்கு கேப்டன்சியில் திறமை உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஓவர் பில்டப்புடனேயே எப்போதும் வலம் வருகிறார் கோஹ்லி என்பது ரொம்ப நாள் குற்றச்சாட்டு. அதைக் குறைத்து அடக்கமானாலே அமரருள் உய்க்கலாம் என்று கிரிக்கெட் விரும்பிகள் சொல்கிறார்கள்.

ஐபிஎல் அராத்து...!

ஐபிஎல் அராத்து...!

எப்பப் பார்த்தாலும் மோதல் போக்கில் ஈடுபடுவது, முரட்டுத்தனமாக காணப்படுவது, கை முறுக்குடன் வலம் வருவது என்று கடபுடா கடபுடா என்று காணப்படுகிறார் கோஹ்லி. ஐபிஎல் தொடரில் கூட கம்பீருடன் அராத்தாக மோதியதை யாருமே ரசிக்கவில்லை.

சிந்தித்து செயலாற்றலாமே...

சிந்தித்து செயலாற்றலாமே...

செத்த, முரட்டுத்தனத்தையும், ஆவேசத்தையும் குறைத்து விட்டு நம்ம 'தல' டோணியைப் போல சிந்தித்து செயலாற்றினால் புதிய 'ரூட்டு தல'யாக கோஹ்லி பரிமளிக்கலாம்... யோசிப்பீகளா..!

அது சரி பாவம் அவரே குழம்பிப் போயிருக்காரு... யோசிச்சு முடிவெடுக்கட்டும் விடுங்க!

Story first published: Wednesday, July 3, 2013, 11:56 [IST]
Other articles published on Jul 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+