Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு நன்றி கூற வார்த்தையில்லை: ட்விட்டரில் நெகிழ்ந்த டெண்டுல்கர்

Sachin Tendulkar
முசோரி: கிரிக்கெட் போட்டிகளில் தமக்கு ஆதரவு கொடுத்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்னிடம் நன்றி கூற வார்த்தைகள் இல்லை என்று ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் சகாப்தம் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் தற்போது உத்தர்காண்ட் மாநிலம் முசோரியில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதத்துக்குப் பிறகு இன்று காலை 8 மணியளவில் ட்விட்டர் பக்கத்தை ஓப்பன் செய்து தமது மனதில் பட்ட கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

அந்தப் பதிவில், ஒருநாள் போட்டிகள் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்.. அனைவருக்கும் என் நன்றி...இத்தனை ஆண்டுகளாக என் மீது அன்பு வைத்து ஆதரவு கொடுத்த ஒவ்வொருவருக்கும் நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை....அதுவும் குறிப்பாக கடந்த சில நாட்களாக எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தருணங்கள் என் இதயத்தை நெகிழ வைக்கிறது. அந்த நேரத்தில் நான் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 25, 2012, 10:02 [IST]
Other articles published on Dec 25, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+