Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி அணியின் கேப்டனான இந்திய கேப்டன் டோணி

Mahendra Singh Dhoni Named Captain Of ICC Team Of The Tournament
லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கனவு அணியின் கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன் அணியான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களைக் கொண்ட கனவு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இநத அணியை ஐவர் குழு தேர்வு செய்தது.

இந்த கனவு அணிக்கு கேப்டனாக டோணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் சாம்பியன்ஸ் போட்டியில் அதிரடி காட்டிய இந்தியாவின் தவான், கோஹ்லி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகிய இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர். மேலும் டிராட், சங்ககரா, மிஸ்பா, மெக்லாரன், ஆண்டர்சன், மெக்லனகன் ஆகியோருடன் 12வது வீரராக ஜோ ரூட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Friday, June 28, 2013, 16:29 [IST]
Other articles published on Jun 28, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+