என்னால் இப்போது கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட முடியும்-லட்சுமண்

ஐந்து மாதங்களுக்கு முன்பு திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் வி.வி.எஸ்.லட்சுமண். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டெல்லி வந்த லட்சுமண் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட போட்டிகளில் பங்கேற்கக்கூடிய உடல்தகுதியுடன் இருப்பதாகவே கருதுகிறேன் என்றார் லட்சுமண்.
இப்படிக் கூறியுள்ளதன் மூலம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அவர் ஆர்வமாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Story first published: Sunday, January 6, 2013, 13:19 [IST]
Other articles published on Jan 6, 2013


Click it and Unblock the Notifications