வான்கடே மைதானத்தில் ரஞ்சிக் கோப்பை பைனல் : மும்பை கிரிக்கெட் சங்கம் கோரிக்கை

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருந்த உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி எதிர்ப்புகள் காரணமாக ஒடிஷாவின் கட்டாக் ஸ்டேடியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மும்பை கிரிக்கெட் சங்க இணை செயலாளர் நிதின் தலால், ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு நாங்கள் தகுதி பெற்றால் மும்பை வான்கடே மைதானத்தில்தான் நடத்த வேண்டும் என்று விரும்பினோம் என்றார்.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி வரும் 26-ந் தேதி நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் செளராஷ்டிராவும் மும்பை அணியும் மோதுகின்றன.
Story first published: Monday, January 21, 2013, 14:08 [IST]
Other articles published on Jan 21, 2013


Click it and Unblock the Notifications