Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கணவருக்குப் போட்டியாக கையில் 'டட்டூ'வுடன் ஷிகர் தவானின் மனைவி!

ஹைதராபாத்: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ஈஷா முகர்ஜி தனது கணவருக்குப் போட்டியாக தானும் கையில் பெரிய சைஸ் டட்டூவுடன் கலக்கி வருகிறார்.

ஷிகர் தவான் தற்போது இந்திய கிரிக்கெட் அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியப் பெயர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அதிரடியாக ஆடி சதம் போட்டவர்.

தற்போது ஐபிஎல்லில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட்டிங்கில் கலக்கி வரும் தவானின் மிகப் பெரிய பலம் அவரது மனைவி ஈஷாதான்.

தவானின் தீவிர ஆதரவாளர்

தவானின் தீவிர ஆதரவாளர்

ஷிகார் தவானின் தீவிர ஆதரவாளர் அவரது மனைவி ஈஷாதான். தவான் எந்தப் போட்டியில் ஆடினாலும் கூடவே வந்திருந்து உற்சாகப்படுத்தி கணவருக்கு உந்துசக்தியாக விளங்குவாராம் ஈஷா.

இந்திய - இங்கிலாந்து கலப்பு

இந்திய - இங்கிலாந்து கலப்பு

ஈஷா முகர்ஜியின் பெற்றோர் இந்திய, இங்கிலாந்து கலப்பு ஆவர். தனது இளம் பிராயத்தை பெரும்பாலும் இங்கிலாந்தில்தான் கழித்துள்ளார் ஈஷா.

தவான் 2வது கணவர்

தவான் 2வது கணவர்

ஈஷா தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பின்னர்தான் தவானைக் கல்யாணம் செய்து கொண்டார். முதல் கணவர் மூலம் ஈஷாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவி அமைவதெல்லாம்...

மனைவி அமைவதெல்லாம்...

மனைவி குறித்து தவான் கூறுகையில், எனது மனைவிக்கு நான் நன்றி சொல்கிறேன். அவரது அன்புக்கும், பிரியத்திற்கும் அளவே கிடையாது. எனது இரு மகள்களும், எனக்கு முழு ஆதரவாக உள்ளது மன நிறைவைத் தருகிறது என்றார்.

ரஞ்சிப் போட்டியையும் விடுவதில்லை

ரஞ்சிப் போட்டியையும் விடுவதில்லை

மேலும் அவர் கூறுகையில், ரஞ்சிப் போட்டியாக இருந்தாலும் கூட ஈஷா மைதானத்திற்கு வந்து விடுவார். கூட்டமே இல்லாவிட்டாலும் தனியாக உட்கார்ந்து ஆதரவு தெரிவிப்பார். எனக்கு நல்ல சாப்பாடு கிடைப்பதையும் உறுதி செய்கிறார் அவர். வேறென்ன வேண்டும் பாஸ் என்கிறார் சந்தோஷமாக.

டட்டூ போட்டி

டட்டூ போட்டி

தற்போது தவானும், ஈஷாவும் டட்டூ போட்டியில் இறங்கியிருப்பது போலத் தெரிகிறது. தவான் ஏற்கனவே கையில் பெரிய சைஸ் டட்டூவுடன் இருப்பவர். தற்போது மனைவி ஈஷாவும் பெரிய சைஸிலான டட்டூவுடன் காணப்படுகிறார்.

Story first published: Sunday, May 5, 2013, 14:44 [IST]
Other articles published on May 5, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+