விளையாட்டுத் துறையில் லஞ்சமா? ட்ரான்ஸ்ஃபர் வேண்டாம்.. சிபிஐ நடவடிக்கை தான் சரி என்ற அமைச்சர்
டெல்லி : விளையாட்டு அமைச்சக ஊழியர்கள் சிலர் லஞ்சப் புகாரில் சிக்கிய நிலையில் அவர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கையை வரவேற்று கருத்து கூறியுள்ளார் விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். இடமாற்றம் செய்வது இது போன்ற புகார்களில் தீர்வாக அமையாது எனவும் கூறினார்.

மத்திய விளையாட்டுத் துறை ஊழியர்கள் சிலர் மீது லஞ்சப் புகார் எழுந்ததை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை சிபிஐயில் அளிக்கப்பட்டது. சிபிஐ ஆறு ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
19 லட்ச ரூபாய் மதிப்புள்ள கோப்புக்களை நகர்த்த 3 சதவீதம் லஞ்சம் கேட்டதாக விளையாட்டு அமைச்சர் ரத்தோருக்கு சில மாதங்களுக்கு முன்னர் புகார் வந்ததை அடுத்து சிபிஐ விசாரணைக்கு இந்த புகாரை அனுப்பியுள்ளது அமைச்சகம்.
இது குறித்து பேசிய அமைச்சர் ரத்தோர், இடமாற்றம் செய்து இந்த பிரச்சனையை தற்காலிகமாக முடித்து வைத்திருக்கலாம். ஆனால், அது தீர்வாக அமையாது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications