
ஷேவாக் நீக்கம் ஆச்சரியமாக இருக்கிறது
வீரேந்திர ஷேவாக்கை ஆஸ்திரேலியாவுடனான மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்காமல் நீக்கியிருப்பது ஆச்சரியம் தருகிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.

கேப்டன் சம்மதம் இல்லாமல்
இதுபோன்ற முக்கிய, பெரிய முடிவை கேப்டனின் சம்மதம் இல்லாமல் எடுக்க முடியாது. டிராவிட், லட்சுமண், சச்சின், ஷேவாக் போன்றவர்களை உறுதியுடன் ஒரு கேப்டன் ஆதரித்தால், நிச்சயம் எந்தத் தேர்வாளரும் அவர்களை நீக்க முடியாது.

டோணியின் கைவரிசையும் இருக்கும்
எனவே ஷேவாக் நீக்கத்தின் பின்னணியில் நிச்சயம் டோணியும் சம்பந்தப்பட்டிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மிகச் சிறந்த வீரர் ஷேவாக்
இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஷேவாக்கும் ஒருவர். நிச்சயம் ஷேவாக்கின் இழப்பை இந்திய அணி அனுபவிக்கும்.

இலக்கணத்தை மாற்றியவர் ஷேவாக்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தொடக்கத்தின் இலக்கணத்தை முழுமையாக மாற்றியவர் ஷேவாக். அவருடைய ரன்களையும், அவர் ரன் குவித்த விதத்தையும் பார்த்தாலே அவருடைய அருமையைப் புரிந்து கொள்ளலாம்.

சச்சினுக்கு சளைத்தவர் அல்ல ஷேவாக்
சச்சின், டிராவிட், கவாஸ்கர் ஆகியோருடன் ஒப்பிடப்பட வேண்டியவர் ஷேவாக். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல ஷேவாக்.

ஐபிஎல்லில் கவனம் செலுத்த வேண்டும்
ஷேவாக் வரவிருக்கிற ஐபிஎல் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். கவுன்டி போட்டிகளில் ஆட முன்வர வேண்டும்.

மக்களுக்கு ஞாபக மறதி ஜாஸ்தி
இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் வெற்றியை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் நாம் அதற்கு முன்பு 13 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகளை இழந்தது குறித்து மக்கள் மறந்து விட்டனர் என்றார் கங்குலி.


Click it and Unblock the Notifications











