ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களைப் பூர்த்தி செய்தார் டோணி

இன்று பாகிஸ்தானுடன் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியின்போது இந்த ரன்களை அவர் எடுத்தார். 7000 ரன்களை எடுத்த 7வது இந்திய வீரர் டோணி ஆவார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார். சச்சின் 18,426 ரன்களை குவித்துள்ளார். 2வது இடத்தில் கங்குலி 11,221 ரன்களும், ராகுல் டிராவிட் 10,768 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
அதற்கடுத்த இடங்களில் அசாருதின் 9378 ரன்களுடனும், ஷேவாக் 8242 ரன்களுடனும், யுவராஜ் சிங் 8053 ரன்களுடனும் உள்ளனர்.
டோணி இன்று போட்ட சதம் அவரது ஒரு நாள் போட்டி வரலாற்றில் 8வது சதமாகும்.
இதே சென்னையில்தான் 2005ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் டோணி ஆடி அறிமுகம் ஆனார். அதை மைதானத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் போட்டுள்ள சதமும் வந்துள்ளகது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 30, 2012, 15:52 [IST]
Other articles published on Dec 30, 2012


Click it and Unblock the Notifications