6 செமஸ்டரிலும் ஃபெயிலான கூல் கேப்டன் டோணி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர். அவர் அங்குள்ள டிஏவி பள்ளியில் படித்தார். அதன் பிறகு கிரிக்கெட் விளையாட வந்துவிட்டதால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இந்நிலையில் அவர் ராஞ்சியில் உள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் பிசினிஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர்ந்தார்.
அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருவதால் கல்லூரி நிர்வாகம் அவருக்காக பல விதிமுறைகளை தளர்த்தியது. இந்நிலையில் கடந்த 6 செமஸ்டரிலும் தொடர்ந்து ஃபெயிலாகியுள்ளார். இதனால் அவர் பி.பி.எம். டிகிரி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட்டில் ஹீரோவாக இருக்கும் டோணியால் படிப்பில் சாதிக்க முடியவில்லையே.
Story first published: Monday, February 18, 2013, 9:40 [IST]
Other articles published on Feb 18, 2013


Click it and Unblock the Notifications