
இதுவரை வெல்லவில்லை
இதுவரை நாம் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில்லை. ஒரு முறை இணைந்து வெற்ரி பெற்றுள்ளோம். எனவே இது நல்ல வாய்ப்பு. இதை பயன்படுத்தி வெல்லப் பார்ப்போம்.

பாகிஸ்தான் நல்ல அணிதான்
பாகிஸ்தான் அணி வலுவானதாக தெரிகிறது. நல்ல பவுலர்கள் அவர்களிடம் உள்ளனர். எனவே பாகிஸ்தானுடனான மோதல் கடுமையாகவே இருக்கும். இருப்பினும் நாம்வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்.

விதிமுறைகள் கடுமைதான்
ஒரு நாள் போட்டிகளுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்ட பின்னர் போட்டிகள் சவாலுக்குரியவையாக மாறியுள்ளன. இந்த விதி மாற்றங்களுக்குப் பிறகு நாம் முதல் முறையாக வெளிநாட்டுத் தொடரில் மோதவுள்ளோம்.

இளைஞர்களே பொங்கி எழுங்கள்
இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு. திறமையைக் காட்ட நல்ல களம் கிடைத்துள்ளது. அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

அதுக்கெல்லாம் நிறைய நேரம் இருக்கு
முதல் போட்டிக்கு முன்பு நமக்கு நிறைய கால அவகாசம் உள்ளது. மேலும் ஒவ்வொரு போட்டிக்கு இடையிலும் நல்ல இடைவெளி இருக்கிறது.

அந்த சோகத்தை ஏன் இப்பக் கிளறுறீங்க
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தோல்வியை மறக்க முயலுகிறோம். நாம் அப்போது சரியாக விளையாடவில்லை. அதேசமயம் ஒரு நாள் தொடரை சிறப்பாக விளையாடினோம். டாஸ் ஜெயிக்கவே இல்லை. எனவே அதுவும் ஒரு முக்கியக் காரணம், தோல்விக்கு.

இப்ப பெட்டரா இருக்கோம்
இப்போது நல்ல பேலன்ஸ்ட் ஆன இந்திய அணியாக திகழ்கிறோம். நல்ல பந்து வீச்சாளர்கள், குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்கள் நம்மிடம் உள்ளனர். எனவே தெம்பாக இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications