என்னை விட டோணி வென்ற உலகக் கோப்பைதான் சிறந்தது -கபில் தேவ்
கொல்கத்தா: 1983ம் ஆண்டு எனது தலைமையில் வென்ற உலகக் கோப்பையை விட 2011ல் டோணி தலைமையில் இந்திய அணி வென்ற உலகக் கோப்பைதான் மிகச் சிறந்தது என்று பாராட்டியுள்ளார் கபில் தேவ்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு புகழாரம் சூட்டினார் கபில் தேவ்.
கபில் தேவ் உலகக் கோப்பையை வென்று 28 ஆண்டுகள் கழித்து டோணி மூலம் இந்தியாவுக்கு 2வது உலகக் கோப்பை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா நிகழ்ச்சியில் கபில்தேவ் கூறியதாவது...

இதுதான் பெரிய வெற்றி
உண்மையில் டோணி தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றிதான் பெரியது. காரணம், கடுமையான போட்டிகளைத் தாண்டி கிடைத்த வெற்றி இது.

அடுத்த கோப்பை மேலும் கடினமாகும்
இனி அடுத்த தலைமுறையின்போது போட்டிகள் மேலும் கடுமையாகும்.

இளம் வீரர்கள் கலக்குகிறார்கள்
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினர். சச்சின், யுவராஜ், கம்பீர், ஷேவாக் இல்லாமலேயே கலக்கி விட்டனர்.

அடுத்த தலைமுறை வந்து விட்டது
இந்திய கிரி்க்கெட்டில் அடுத்த தலைமுறை வந்து விட்டது. அத்தனை பேரும் சிறப்பாக ஆடுகின்றனர்.

தலைவர்னா அது டோணிதான்...
டோணியின் கேப்டன்ஷிப் அபாரமாக இருக்கிறது. இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன் டோணிதான் என்பதில் சந்தேகமே இல்லை.

போராடினால் ஷேவாக், கம்பீர் வெல்லலாம்
ஒரு வீரர் தான் ஒதுக்கப்படுவதாக நினைக்கும்போது மீண்டும் அணிக்குத் திரும்ப போராட வேண்டும். திறமையைக் காட்ட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர் நல்ல போராளி அல்ல. ஷேவாக், கம்பீருக்கும் இது பொருந்தும் என்றார் கபில்.


Click it and Unblock the Notifications