Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காதை கிட்ட கொண்டு வாங்க.. டோணி சொல்லும் ரகசியத்தைக் கேளுங்க!

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா எப்படி வெல்லத் திட்டமிட்டுள்ளது என்பது பெரிய ரகசியம்.. அதைச் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.

சாம்பியன்ஸ்டிராபி போட்டி இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.

இந்தப் போட்டியில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள், எப்படி வெல்லப் போகிறீர்கள் என்பது குறித்து டோணியிடம் கேட்கப்பட்டது. அதுகுறித்து டோணி அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

பயிற்சியில் ஆஸியை வென்று நல்லது

பயிற்சியில் ஆஸியை வென்று நல்லது

வார்ம் அப் போட்டியி்ல இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்து வென்றது நல்லது. சிறந்த பேட்டிங் திறமையை நாங்கள் வெளிப்படுத்தினோம். முக்கியப் போட்டிகளுக்கு இது உதவும். நல்ல பார்ட்னர்ஷிப்புகளையும் நாங்கள் கொடுத்தோம்.

அது ரகசியம்...

அது ரகசியம்...

தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி குறித்த திட்டமிடல்கள் ரகசியமானவை. பெரிய ரகசியம் அது. வெளியே சொல்ல முடியாது. ஆனால் விதிமுறைகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதை சமாளிக்க முயற்சிப்போம். நான்கு பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். பார்க்கலாம்.

எதிர்பார்ப்புகள் எப்போதுமே அதிகம்தான்...

எதிர்பார்ப்புகள் எப்போதுமே அதிகம்தான்...

இங்கிலாந்தில் இந்திய ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்தியா விளையாடு வரும்போதெல்லாம் எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளன. அதை நிறைவேற்றவே முயல்கிறோம். இதனால் எங்களுக்கு பிரஷரும் அதிகமாகவே உள்ளது. அதை சமாளித்து விளையாடவே முயல்கிறோம்.

கல்லிஸை சமாளிப்பது கஷ்டம்தான்

கல்லிஸை சமாளிப்பது கஷ்டம்தான்

தென் ஆப்பிரிக்க அணி எப்போதுமே வலுவான அணிதான். அதிலும் கல்லிஸ் போன்ற வீரர்களை எதிர்கொள்வது சிரமமானது. அருமையான வீரர் அவர். சிறந்த ஆல் ரவுண்டர். அவர் இல்லாமலும் கூட தென் ஆப்பிரிக்கா வலுவான அணிதான். எனவே போட்டி சவாலுக்குரியது என்பதில் சந்தேகம் இல்லை.

ஓப்பனிங் கவலையா இருக்கு

ஓப்பனிங் கவலையா இருக்கு

நல்ல ஓப்பனிங் கிடைக்க வேண்டியது அவசியம். அது இல்லாமல் போனால் கவலையாகி விடும். பயிற்சிப் போட்டிகளில் ஓப்பனிங் சரியில்லை என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. முக்கியப் போட்டிகளில் ஜொலிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

அருமையான வீரர் திணேஷ்

அருமையான வீரர் திணேஷ்

நடுக்களத்தில் திணேஷ் கார்த்திக் அருமையான வீரர். இதை நான் எப்போதுமே உறுதியாக கூறி வருகிறேன். நல்ல ரன்னரும் கூட திணேஷ். சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆடுவதில் வல்லவர். நீண்ட நேரம் நின்று விளையாடக்கூடியவர். நடுக்களத்தில் அவர் முக்கியமான வீரர். டெக்னிக்கலாகவும் சிறந்த வீரர். மிகச் சிறந்த வீரர் திணேஷ் கார்த்திக் என்பது எனது கருத்து என்றார் டோணி.

Story first published: Thursday, June 6, 2013, 12:37 [IST]
Other articles published on Jun 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+