Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் மொதல்ல இருந்து... தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் போட்டியின்றி தேர்வு!

Srinivasan
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக கடும்நெருக்கடி நிலவி வந்தபோதிலும், தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளார் சீனிவாசன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக அவர் போட்டியின்றித் தேர்வாகி அனைவர் மூக்கிலும் விரலை வைக்கச் செய்துள்ளார்.

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைதானதைத் தொடர்ந்து சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று பெரும் நெருக்கடி மூண்டது. என்னென்னவோ செய்து சமாளிக்கப் பார்த்தார் சீனிவாசன். இருப்பினும் நிலைமை மோசமானதால் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து ஜக்மோகன் டால்மியா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 83வது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டத்தி்ல் சங்கத்தின் தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் சீனிவாசன்.

சீனிவாசனின் நெருங்கிய நண்பரான காசி விஸ்வநாதன் செயலாளராக 7வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக கல்பாத்தி அகோரம், பிரபாகர் ராவ், ராகவன், பி.எஸ்.ராமன், கனகராஜன், ரமேஷ் ஆகியோரும், இணைச் செயலாளராக பழனி, துணைத் செயலாளராக ராமசாமி, பொருளாளராக வி.பி.நரசிம்மன் ஆகியோர் தேர்வானார்கள்.

Story first published: Monday, June 24, 2013, 19:18 [IST]
Other articles published on Jun 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+