Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின் 'ஷூ லேஸைக்' கட்டக் கூட யாருக்கும் தகுதி கிடையாது- ரவி சாஸ்திரி 'லூஸு'ப் பேச்சு!

Ravi Shastri and Sachin
கொல்கத்தா: முன்னாள் கேப்டனும், தற்போது டிவியில் வர்னணையாளர் வேலை பார்த்துக் கொண்டிருப்பவருமான ரவி சாஸ்திரி ஒரு பேச்சு பேசியுள்ளார் - சச்சின் குறித்துதான். ஆனால் அவரது பேச்சுதான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது. சச்சினை உயர்த்திப் பேசுவதாக நினைத்து மற்றவர்களை படு கேவலமாக மட்டம் தட்டியுள்ளார் சாஸ்திரி.

கொல்கத்தா டெஸ்ட் போட்டி குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், சச்சின் டெண்டுல்கருக்கு மாற்றான, இணையான வீரர் நிச்சயம் நம்மிடம் இல்லை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால் சச்சினுக்கு மாற்று வீரர் இப்போதைக்கு நம்மிடம் இல்லை. ஏன், அவரது ஷூ லேஸைக் கட்டக் கூட தகுதியானவர்கள் நம்மிடம் இல்லை.

சச்சின் கண்டிப்பாக இந்திய அணிக்கு்த் தேவை. அவர் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்த விதத்தைப் பாருங்கள். அதை எடுத்து விட்டால் இந்திய அணியின் நிலை என்ன...

சச்சின் மிக முக்கியமான ஆட்டத்தை ஆடியுள்ளார். அவருக்கு பலமுனைகளிலிருந்தும் நெருக்குதல்கள். ஆனால் அதையும் மீறி அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் நெருக்குதல்களால் அவர் பாதிக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்றார் ரவி சாஸ்திரி.

சாஸ்திரியின் ஷூ லேஸ் பேச்சு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க...

Story first published: Thursday, December 6, 2012, 12:08 [IST]
Other articles published on Dec 6, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+