சாம்பியன்ஸ் டிராபி - ஆட்டநாயகனுக்கு கடிகாரம் மட்டும் தான்: ஐசிசி
ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட்டநாயகன் விருத்துக்கு பணத்துக்கு பதிலாக கடிகாரங்கள் மற்றும் மேலங்கிகள் வழங்கப்படும் ஐசிசி அறிவித்துள்ளது.
இது குறித்து ஐசிசியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஹரூன் லோர்கத் கூறுகையில்,
இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெறுபவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது.
அதற்கு பதிலாக அவர்களுக்கு விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் மேலங்கிகள் வழங்கப்படும். இது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
இந்த ஆண்டு சாதனை அளவாக ரூ. 20 கோடிக்கும் மேல் பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், இத்தொடரில் அனைத்து அணிகளும் ஜோகன்னஸ்பர்க்கில் தான் தங்கியுள்ளன. இதனால் தேவையற்ற போக்குவரத்து செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications