'குரங்கு' சேட்டை: ஆஸி. ரசிகர் கைது!

அடிலைட்: ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விளையாடியபோது, குரங்கு முகமூடியுடன் அடிலைட் மைதானத்தில் புகுந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகரை போலீஸார் கைது செய்தனர்.
அடிலைட் ஓவல் மைதானத்தில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. அப்போது சைமண்ட்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு ரசிகர் குரங்கு முகமூடி அணிந்தபடி மைதானத்திற்குள் ஓடி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த ரசிகரைக் கைது செய்தனர். அவர் மீது அத்துமீறி நுழைந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மைதானத்திற்குள் நுழைந்த அந்த ரசிகர் இந்திய வீரர்களுக்கு மத்தியில் அங்குமிங்கும் ஓடினார். பின்னர் போலீஸார் விைரந்து வந்து அவரைப் பிடித்து அப்புறப்படுத்தினர்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. அப்போது, சைமண்ட்ஸை ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்தது நினைவிருக்கலாம்.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இனவெறி எதிர்ப்புப் பிரிவு அதிகாரி பீட்டர் யங் கூறுகையில், இது போலீஸ் விவகாரம். அத்துமீறி மைதானத்திற்குள் நுழைவது சாதாரண விஷயமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications