Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர்-8க்கு முன்னேறிய பாக்!

லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான், 82 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்று சூப்பர்-8க்கு முன்னேறியது.

டுவென்டி-20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக நடந்த லீக் போட்டியில் நெதர்லாந்து இங்கிலாந்தையும், இங்கிலாந்து பாகிஸ்தானையும் வென்றது. இதையடுத்து பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியுடன் களம் கண்டது.

ஏற்கனவே இரண்டு புள்ளிகள் பெற்றிருந்த நெதர்லாந்து மிகப்பெரிய தோல்வி பெறாத பட்சத்தில் சூப்பர்-8க்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. கம்ரான் அக்மல் 41, சோயப் மாலிக் 30, யூனிஸ் 36, மிஸ்பா 31 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 151 ரன்களுக்கு மேல் எடுத்து தோற்றால் கூட சூப்பர்-8 நுழைந்துவிடலாம் என்ற நிலை உருவானது. இந்நிலையில் பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான், நெதர்லாந்தை 17.3 ஓவரில் 93 ரன்களுக்கு சுருட்டியது. இதையடுத்து மூன்று அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்ற நிலையில் அதிக ரன்விகிதம் கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தான் சூப்பர்-8க்கு முன்னேறியது. நெதர்லாந்து வெளியேறியது.

தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி...

நேற்று நடந்த மற்றொரு திரில்லான போட்டியில் தென் ஆப்ரிக்கா கடைசி பந்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 1 ரன்னில் தோற்றது.

சூப்பர்-8 அணிகள்...

இதையடுத்து தற்போது சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் முடிவாகிவிட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, அயர்லாந்து அணிகளும், பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளும், சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கையும், டி பிரிவில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளும் சூப்பர்-8க்கு முனனேறியுள்ளன.

ஆஸ்திரேலியா, வங்கதேசம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் சூப்பர்-8 வாய்ப்பை நழுவவிட்டு வெளியேறின.

Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+