Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாடா.. 'பைட்' பண்ணி 'சீட்' பெற்றார் அப்ரிதி.. சானியா வீட்டுக்காரர் அவுட்!

Pakistan recall Shahid Afridi, drop Shoaib Malik
கராச்சி: பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் இடம் பிடிக்க கடுமையாக போராடிய ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதிக்கு மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேசமயம், சானியா மிர்ஸாவின் கணவரான சோயப் மாலிக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அப்ரிதியுடன் உமர் அக்மல், அகமது சாஷாத் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இரு தரப்பு ஒரு நாள் தொடருக்கான அணியில் அப்ரிதி மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

அணியில் இடம் பிடித்துள்ள மற்றவர்கள் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அகமது, ஹரிஸ் சொஹைல், ஜுல்பிகர் பாபர் ஆகியோர் ஆவர்.

முன்னாள் கேப்டனான சோயப் மாலிக், சமீபத்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்டுள்ளார். அத்தொடரில் அவர் மொத்தமே 25 ரன்கள் தான் எடுத்தார்.

அதேபோல விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பர்ஹத் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

அப்ரிதிக்கு மீண்டும் இடம் கிடைத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 6 மாதமாக அணியில்இடம் பிடிக்க போராடி வந்தார் அப்ரிதி என்பது நினைவிருக்கலாம். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி போய் விட்டு மீண்டும் விளையாட வந்தவர் என்பது நினைவிருக்கலாம்.

அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் தொடர்கிறார். அதேசமயம், டுவென்டி 20 போட்டிகளுக்கு முகம்மது ஹபீஸ் கேப்டனாக இருப்பார்.

Story first published: Thursday, July 4, 2013, 11:43 [IST]
Other articles published on Jul 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+