பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விளையாட வரும் பாக். மகளிர் கிரிக்கெட் அணி

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை போட்டிகள் வரும் 31ம் தேதி துவங்குகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் மும்பையில் உள்ள 5 ஸ்டேடியங்களில் நடைபெறுகிறது. இதற்கிடையே இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொன்றதால் இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி மும்பையில் வந்து விளையாடினால் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம் என்றும், அவர்கள் விளையாடும் இடத்தை மாற்ற வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசிக்கு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி மும்பைக்கு பதில் ஒரிசா மாநிலம் கட்டாகில் விளையாடவிருக்கிறது.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் காரணமாக ஹாக்கி இந்தியா லீக்கில் விளையாட வந்த பாகிஸ்தான் அணி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, January 22, 2013, 16:08 [IST]
Other articles published on Jan 22, 2013


Click it and Unblock the Notifications