கங்குலி, டிராவிடை தூக்கிய பெப்சி!

ரொம்ப பாப்புலராக இருக்கும் சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை தங்களது பிராண்ட் அம்பாசடர்களாக நியமிப்பது பிரபல நிறுவனங்களின் வழக்கம். தங்களது ஸ்டார்களின் மவுசு குறைவது போலத் தெரிந்தால் அல்லது குறைந்தால் அவர்களுக்குப் புதிய புதிய மவுசுக்கு மாறுவதும் வாடிக்கை.
அந்த வகையில் இப்போது பெப்சி நிறுவனதம் தனது பிராண்ட் அம்பாசடர்கள் பட்டியலில் மாற்றம் செய்துள்ளது. இதுவரை நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வந்த கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கிரிக்கெட் அணியில் இடம் இல்லை. இதனால் தனது பிராண்ட் அம்பாசடர்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது பெப்சி.
அவர்களுக்குப் பதில் அணியில் புது செல்வாக்கு பெற்றுள்ள இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மாவை சேர்த்துள்ளது.
அதேசமயம், நீண்ட காலமாக பிராண்ட் அம்பாசடராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் குறித்து பெப்சி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தனது பிராண்ட் அம்பாசடர் பட்டியலில் உள்ள கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்காக புதிய விளம்பரம் ஒன்றை உருவாக்கவுள்ளதாம் பெப்சி நிறுவனம்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:25 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications