For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு...விராட் கோலி, சானியா மிர்சா இரங்கல்

டெல்லி : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக விராட்கோலி, சானியா மிர்சா ஆகியோர் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தல் தங்களது விருப்பத்திற்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சகிச்சை பெற்ற வருபவர்கள் கூடிய விரையில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா... இந்தப் பொண்ணைப் பாருங்க.. எப்படி சைக்கிள் ஓட்டுதுன்னு.. நாமளும் இருக்கோம்!அடேங்கப்பா... இந்தப் பொண்ணைப் பாருங்க.. எப்படி சைக்கிள் ஓட்டுதுன்னு.. நாமளும் இருக்கோம்!

11 பேர் உயிரிழப்பு

11 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி டிவிட்டர் பதிவு

விராட் கோலி டிவிட்டர் பதிவு

இந்த விஷவாயு கசிவால் அப்பகுதியில் வசித்துவந்த 1000க்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலையும்,பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கூடிய விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா வருத்தம்

சானியா மிர்சா வருத்தம்

இதனிடையே, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று வருத்தம் தெரிவித்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இறந்தவர்களுக்காக தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் பாதக்கப்பட்டவர்கள் விரவில் குணம்பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட கேப்டன் சுனில் சேத்ரி

கால்பந்தாட்ட கேப்டன் சுனில் சேத்ரி

விசாகப்பட்டினத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் அவநம்பிக்கையை எற்படுத்துவதாக இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார். இவரும் உயிரிழந்தவர்கள் மற்றும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

விரைவில் குணமடைய பிரார்த்தனை

விரைவில் குணமடைய பிரார்த்தனை

இதேபோல கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஆகியோரும் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த இந்த தொழிற்சாலை பராமரிப்பின்றி திறக்கப்பட்டதால் விஷவாயு கசிவு எற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, May 7, 2020, 19:40 [IST]
Other articles published on May 7, 2020
English summary
"Stay Strong Vizag": Sania Mirza, Virat Kohli Condole Gas Leak Victims
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X