Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியின்போது புஜாராவுக்கு காயம்... பதிலுக்கு இடம் பிடிக்கப் போவது யார்?

Chateswar Pujara
மொஹாலி: இந்திய கிரிக்கெட் வீரர் சட்டேஸ்வர் புஜாராவுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளையும் இந்தியா வென்று விட்டது. அடுத்த இரு போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை 3வது டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்கான பயிற்சியின்போது வீரர் சட்டேஸ்வர் புஜாரா காயமடைந்தார். அவருக்கு இடது முழங்கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்குப் பதில் யார் சேர்க்கப்படுவார் என்பது தெரியவில்லை. ஷிகார் தவன் அல்லது அஜிங்கியா ரஹானே அணியில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியில் ஷான் வாட்சன் உள்ளிட்ட நான்கு முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதால் அந்த அணி மேலும் பலவீனமடைந்துள்ளது. குறிப்பாக ஷான் வாட்சன், மிச்சல் ஜான்சன் ஆகியோர் இல்லாதது இந்தியாவுக்கு பெரும் பலமாக அமையும். எனவே இதைப் பயன்படுத்தி 3வது போட்டியை வென்று தொடரையும் கைப்பற்ற இந்தியா முனையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கி்றார்கள்.

இதற்கிடையே, இந்திய அணியில், 3 வேகப் பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் ஹர்பஜன் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் நீக்கப்படலாம்.

Story first published: Wednesday, March 13, 2013, 14:23 [IST]
Other articles published on Mar 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+