Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்கிறார் டிராவிட்?

டெல்லி: 6வது ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போடவுள்ளாராம் ராகுல் டிராவிட். தகவல்கள் கூறுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக தற்போது இருக்கிறார் டிராவிட். இவரது அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களால் ராஜஸ்தான் அணிக்கு பெரும் அவமானமாகி விட்டது.

ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கி 3 பேரும் கைதாகி உள்ளே போய்விட்டனர். இதனால் டிராவிட் உள்பட ராஜஸ்தான் அணி நிர்வாகம் பெரும் அப்செட்டாகி விட்டது.

இந்தநிலையில்தான் கிரிக்கெட்டுக்கு முழுமையாக முழுக்குப் போட முடிவு செய்துள்ளார் டிராவிட் என்று கூறப்படுகிறது.

இந்திய அணியின் பெரும் சுவர்

இந்திய அணியின் பெரும் சுவர்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருந்தவர் டிராவிட். இந்திய அணியின் சுவர் என்று செல்லமாக வர்ணிக்கப்பட்டவர்.

டெஸ்ட் - ஒரு நாள் ஓய்வு

டெஸ்ட் - ஒரு நாள் ஓய்வு

ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் டிராவிட். ஐபிஎல்லில் மட்டுமே தற்போது ஆடி வருகிறார்.

இறுதிப் போட்டி வாய்ப்பு

இறுதிப் போட்டி வாய்ப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழையும் நல்லதொரு வாய்ப்பில் தற்போது ராஜஸ்தான் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் மும்பையை வென்றால் இறுதிப் போட்டிக்குள் நுழையலாம் ராஜஸ்தான்.

சாம்பியன் பட்டத்தோடு ஓய்வு பெறத் திட்டம்

சாம்பியன் பட்டத்தோடு ஓய்வு பெறத் திட்டம்

ராஜஸ்தான் அணியை இறுதிப் போட்டிக்குக் கொண்டு சென்று சாம்பியன் பட்டத்தையும் வென்று அந்த வெற்றிக் களிப்போடு கிரிக்கெட்டிலிருந்து விலக டிராவிட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

அடுத்து என்ன என்பது குறித்து யோசிக்க வேண்டிய கட்டம் வந்து விட்டதாக உணர்கிரேன். இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்று கூறியுள்ளார் டிராவிட்.

சாம்பின்ஸ் டிராபி...

சாம்பின்ஸ் டிராபி...

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, தெரியாது என்று பதிலளித்தார் டிராவிட்.

2 அணிகளின் கேப்டன்

2 அணிகளின் கேப்டன்

ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தவர் டிராவிட். கடந்த ஆண்டுதான் அவர் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக வந்தார்.

Story first published: Friday, May 24, 2013, 12:59 [IST]
Other articles published on May 24, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+