
மும்பை அணிக்காக சச்சின் விளையாடவுள்ளார். ஒரு நாள் போட்டி ஓய்வுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக கிரிக்கெட் விளையாடப் போகிறார் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 8 அணிகள் தற்போது காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. அவை - பஞ்சாப், மும்பை, கர்நாடகா, உ.பி, பரோடா, செளராஷ்டிரா, சர்வீஸஸ் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவையே ஆகும்.
தென்னகத்திலிருந்து கர்நாடகா மட்டுமே காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்புச் சாம்பியன் ராஜஸ்தான் இந்த முறை காலிறுதிப் போட்டிக்குக் கூட தகுதி பெறாமல் தோற்றுப் போய் விட்டது.
ஜனவரி 6ம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. ஜனவரி 16ம் தேதி அரை இறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன. ஜனவரி 26ம் தேதி இறுதிப் போட்டி தொடங்குகிறது.
மும்பை அணி பரோடாவை எதிர்த்தும், கர்நாடகா செளராஷ்டிராவை எதிர்த்தும், உ.பி. சர்வீஸஸை எதிர்த்தும், பஞ்சாப் ஜார்க்கண்ட்டை எதிர்த்தும் காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.