சூடான இட்லி, பூரி, சப்பாத்தி... ஹோட்டல் ஆரம்பித்தார் ரவீந்திர ஜடேஜா

ஜட்டூஸ் பாஸ்ட் பீல்ட் என்று தனது ஹோட்டலுக்கு அவர் பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒன்றும் சாப்பாட்டுப் பிரியன் இல்லை என்றாலும் கிரிக்கெட்டுடன் இணைந்த ஒரு பிசினஸைத் தொடங்க விருப்பமாக இருந்தேன். எனவேதான் கிரிக்கெட் சம்பந்தமான பெயரை எனது ஹோட்டலுக்கு வைத்துள்ளேன்.
ராஜ்கோட் மக்கள் உணவுப் பிரியர்கள். எனவேதான் ஹோட்டலை இங்கு தொடங்கினேன். எனக்குத் தனிப்பட்ட முறையிலும் மிகவும் விருப்பமான ஊர் ராஜ்கோட்.
எனது அதிர்ஷ்ட எண் 12. எனவே டிசம்பர் 12ம் தேதி, அதாவது 12.12.12 அன்று எனது ஹோட்டல் தொடங்கப்படும். எதிர்காலத்தில் ஒரு கிரிக்கெட் அகாடமியையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.
இந்த ஹோட்டலில் பஞ்சாப், சீனா, தென்னிந்திய உணவுவகைகள் கிடைக்குமாம். கான்டினென்டல் உணவுகளும் கிடைக்குமாம்.
இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் போட்டியில் ஆட ஜடேஜா இந்திய அணியில் தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் தனது ஹோட்டலைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications