துபை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவுக்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.
துபையில் சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன் தொடர்ந்தும் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் 764 புள்ளிகள் பெற்றிருக்கிறார்.
2வது இடத்தை இங்கிலாந்தின் ஸ்டீவன் ஃபின், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் ஆகியோர் 729 புள்ளிகள் பெற்று பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ரவீந்திர ஜடேஜா 718 புள்ளிகளிஅப் பெற்று 3வது இடத்தைப் பெற்றுள்ளார். முதல் 10 இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இலங்கையின் குலசேகரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
நியூசிலாந்தின் வெட்டோரி 16வது இடத்தைப் பெற்று மீண்டும் தரவரிசைப் பட்டியலில் இணைந்துள்ளார். லசித் மலிங்கா-11, கெய்ல் மில்ஸ்-12, ஷேன் வாட்சன் -29வது இட மெக்கல்லமுக்கு 38வது இடம் கிடைத்திருக்கிறது.