டெல்லி: ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி மோதியது. இதில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து 4வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் சரத்பவார் கூறுகையில், இந்திய பெண்கள் அணிக்கு பாராட்டுக்கள். ஆசிய கோப்பை லீக் போட்டிகள் இந்திய அணி ஒன்றில் கூட தோல்வி பெறவில்லை.
தொடர்ந்து 6 போட்டிகளிலும் அசராமல் விளையாடி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இறுதி போட்டியில் இலங்கை அணியை 175 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்துள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் 15 வீராங்கனைகளுக்கும் ரூ.5 பரிசுத் தொகை அளிக்கப்படும் என்றார்.