சச்சின்தான் 'பெஸ்ட்'... மனம் விட்டுப் பேசும் ரிக்கி பான்டிங்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று விட்ட பான்டிங் மனம் திறந்து சில விஷயங்களைப் பேசியுள்ளார். அதில் முக்கியமானது, சச்சினை அவர் சிறந்த வீரர் என்று கூறியிருப்பது.
இதுகுறித்து பான்டிங் அளித்த பேட்டியில், நான் விளையாடிய வீரர்களிலேயே சிறந்தவர் சச்சின்தான். ஒரு எதிர் அணி வீரராக மட்டுமல்லாமல், ஒரு கேப்டனாக இருந்த அனுபவத்தை வைத்தும் இதை நான் சொல்கிறேன். சச்சின் டெண்டுல்கர்தான் சிறந்த வீரர். எங்களுக்கு எதிராக பல வெற்றிகளை சச்சின் பெற்றுள்ளார்.
அதேபோல மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக நான் கருதுவது கர்ட்லி அம்புரோஸ், வாசிம் அக்ரம் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரைத்தான். இதில் ஹர்பஜன் சிங் என்னை ரொம்பவே பாடாய்ப்படுத்தியவர் என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும். பலமுறை என்னை அவர் அவுட் செய்துள்ளார் என்றார் பான்டிங்.
Story first published: Tuesday, December 4, 2012, 14:58 [IST]
Other articles published on Dec 4, 2012


Click it and Unblock the Notifications