Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், டோணி, ஹர்பஜன் அரைசதம்-இந்தியா 375

வெல்லிங்டன்: வெல்லிங்டன் டெஸ்டில் சச்சின், கேப்டன் டோணி மற்றும் ஹர்பஜன் சிங் அரைசதம் கடந்தனர். இந்திய அணி முதல் நாள் முடிவி்ல் 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று வெல்லிங்டனில் துவங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. காயம் குணமடைந்த நிலையில் டோணி மீண்டும் கேப்டன் பொறுப்பேற்று கொண்டார்.

துவக்க வீரர் ஷேவாக் சிறப்பாக பேட் செய்தார். அதிரடியாக விளையாடிய இவர் 51 பந்தில் 48 ரன்களுக்கு அவுட்டானார். காம்பீர் 23 ரனகளுக்கு பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த சச்சின், டிராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த சச்சின் 11 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் எடுத்து மார்டின் பந்தில் அவுட்டானார்.

லட்சுமண் (4), யுவராஜ் (9) ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து படுமந்தமாக பேட் செய்த டிராவிட்டும் வெளியேறினார். இவர் 35 ரன்கள் எடுக்க 114 பந்துகளை எடுத்து கொண்டார்.

அடுத்து களமிறங்கிய ஹர்பஜன், டோணியுடன் இணைந்து அசத்தினார். சூப்பராக விளையாடிய டோணி அரைசதம் கடந்தார். இவர் 1 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்பஜன் 1 சிக்சர், 7 பவுண்டரிகளின் உதவியுடன் 78 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்.

ஜாகிர் கான் 23 பந்தில் 33 ரன்கள் எடுத்து, வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் 15, முனாப் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+