Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேவாக் சொதப்பல்-சச்சின், கம்பீர் அரை சதம்

டெல்லி: டெல்லியில் இன்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் லோக்கல் ஹீரோ வீரேந்திர ஷேவாக் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சச்சினும், கம்பீரும் பொறுப்பாக ஆடி அரை சதம் எடுத்தனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று காலை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

கேப்டன் கும்ப்ளே டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கம்பீரும், ஷேவாக்கும் ரன்களைக் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஷேவாக் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் கம்பீர் பொறுப்பான ஆட்டத்தைக் காட்டினார்.

அதேபோல ராகுல் டிராவிடும் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கம்பீருடன், நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் சிறப்பாகவும், பொறுப்பாகவும்,நிதானமாகவும் ஆடி வருகின்றனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இருவரும் அரை சதங்களைக் கடந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின்னர் தொடங்கிய ஆட்டத்தின்போது கம்பீர் 60 ரன்களுடனும், சச்சின் 67 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடு்திருந்தது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:14 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+