Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி பந்து வீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள்

Sachin Tendulkar
சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை சச்சின், லட்சுமண், ஹர்பஜன் ஆகியோர் சேர்ந்து துவம்சம் செய்து விட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் மிகக் கேவலமாக தோற்ற இந்திய அணி 2வது டெஸ்டில் மிகுந்த கவனத்துடன் விளையாடியது.

2வது டெஸ்ட் போட்டி கடந்த 2ம் தேதி புதன்கிழமை துவங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன செல்ல மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த அணியியை ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சதமடித்து சரிவிலிருந்து மீட்டார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112.3 ஓவர்களில் 463 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவின் ஆர்.பி.சிங், கும்ளே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி மிகவும் பொறுப்புணர்வுடன் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் களத்தில் அதிக நேரம் நின்று சாதனை புரிந்த டிராவிட் இந்த போட்டியிலும் அதை கடைபிடிக்க தவறவில்லை. இருப்பினும் அவர் 160 பந்துகளை சந்தித்து 53 ரன்களை எடுத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய வி.வி.எஸ்.லட்சுமண் 102 ரன்களும், கங்குலி 67 ரன்களும் எடுத்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங்கும், டோனியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஹர்பஜன் சச்சினுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை நைய புடைத்தார்.

அவரின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு சச்சின் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். 92 பந்துகளில் 62 ரன்களை எடுத்த ஹர்பஜன் சிங், ஜான்சன் பந்து வீச்சில் அவுட்டானார்.

இறுதியில் இந்திய அணி 138.2 ஓவர்களில் 532 ரன்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 243 பந்துகளில் 154 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சின் அடிக்கும் 38வது டெஸ்ட் சதமாகும்.

ஆஸ்திரேலியாவின் பிரட் லீ 5 விக்கெட்டுகளையும், ஜான்சன் மற்றும் ஹாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கிளார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை விட இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் அதிகம் பெற்றுள்ளது.

பின்னர் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா ஆட்டமிழக்காமல் 5 ஓவர்களில் 13 ரன்களை எடுத்துள்ள நிலையில் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+