Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆன்லைனில் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் ... சச்சின்!

மும்பை: ஆன்லைனில் அதிகம் பேசப்பட்ட, அலசப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெயரை சச்சின்டெண்டுல்கர் பெற்றுள்ளார். கேப்டன் டோணியை விட இவரைத்தான் அதிகம் பேர் ஆன்லைனில் பேசியுள்ளனராம்.

ஒரு புள்ளிவிவரத் தகவலில் இது தெரிய வந்துள்ளது. சமீப காலத்தில் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின்தான் என்று இது தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் கேப்டன் டோணியை விடசச்சின்தான் அதிகம் பேசப்பட்டிருக்கிறார்.

டிவிட்டர் -பேஸ்புக்கில்

டிவிட்டர் -பேஸ்புக்கில்

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் சச்சின் குறித்தே அதிக அளவில் விவாதம் நடந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பேட்டிங் பற்றித்தான் பாதிப் பேச்சு

பேட்டிங் பற்றித்தான் பாதிப் பேச்சு

சச்சினின் பேட்டிங் குறித்து 50 சதவீதம் பேர் பேசியுள்ளனர். அடுத்து அவரது கடந்த கால சாதனைகள் குறித்து அதிக அளவில் பேசியுள்ளனர். ஓய்வு குறித்தும் அலசியுளள்ளனர்.

2வது இடம் டோணிக்கு

2வது இடம் டோணிக்கு

2வது இடத்தில் கேப்டன் டோணி உள்ளார். சச்சினுக்கு அடுத்தபடியாக கேப்டன் டோணி குறித்து பேச்சுதான் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அதிகம் அடிபட்டுள்ளது.

3வது இடத்தில் முரளி விஜய்

3வது இடத்தில் முரளி விஜய்

தமிழக வீரர் முரளி விஜய்க்கு இதில் 3வது இடம் கிடைத்துள்ளது. அவர் அடுத்தடுத்து 2 டெஸ்ட் சதங்கள் காரணமாகஇவரையும் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.

ஆல்ரவுணட்ர் ஜடேஜா

ஆல்ரவுணட்ர் ஜடேஜா

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அடுத்த இடத்தில் இருக்கிறார். இவரது பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது. பவுலிங்கும் அட்டகாசமாக உள்ளது. இதனால் இவரும் லைம்லைட்டில் இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் மகா எரிச்சலில் டோணி

ஆரம்பத்தில் மகா எரிச்சலில் டோணி

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நிறையப் பேர் டோணியைத் திட்டிக் கொண்டிருந்தனராம். ஆனால் அடுத்தடுத்து 3 டெஸ்ட் போட்டிகளையும் அட்டகாசமாக வென்றதைத் தொடர்ந்து தற்போது டோணிக்கு மவுசு கூடி விட்டதாம்.

ஷிகார் தவானுக்கு சிறப்பிடம்

ஷிகார் தவானுக்கு சிறப்பிடம்

சமூக வலைத்தளங்களில் முக்கிய இடம் பிடித்துள்ள வீரராக அதிரடி வீரர் ஷிகார் தவான் உருவெடுத்துள்ளார். 3வது டெஸ்ட் போட்டியில் அவர் போட்ட அபார ரன் குவிப்புதான் இதற்குக் காரணம்.

இப்படியே ஜெயிச்சுட்டிருங்கப்பு.. இல்லாட்டி திட்டித் தீத்துருவாய்ங்க...!

Story first published: Friday, March 22, 2013, 9:23 [IST]
Other articles published on Mar 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+