Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வேயில் ஒரு டெஸ்ட்டிலும் செஞ்சுரி போடலையே சச்சின்??

பெங்களூர்: சச்சின் டெண்டுல்கர் படைக்காத சாதனையே கிரிக்கெட்டில் இல்லை என்று தைரியமாக கூறலாம். ஆனால் அவரால் கூட படைக்க முடியாத ஒரு சாதனை இருக்கிறது... .தெரியுமா..?

ஆம்.. எல்லா நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் சதம் போட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், ஜிம்பாப்வே நாட்டில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியிலும் சதம் போட்டதில்லை.

200வது டெஸ்ட் போட்டியைக் காணவுள்ள சச்சின், இந்த ஒரு விஷயத்தை மட்டும் இதுவரை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்.

200வது டெஸ்ட் ஒரு சாதனை

200வது டெஸ்ட் ஒரு சாதனை

சச்சின் டெண்டுல்கர் 200வது டெஸ்ட் போட்டியை ஆடவுள்ளதே ஒரு சாதனைதான். காரணம், உலகில் இதுவரை எந்த ஒரு வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.

அத்தனை நாடுகளிலும் சதம்

அத்தனை நாடுகளிலும் சதம்

சச்சின் இதுவரை போய் விளையாடியுள்ள அத்தனை நாடுகளிலும் சதம் போட்டுள்ளார்.

ராசியில்லாத ஜிம்பாப்வே

ராசியில்லாத ஜிம்பாப்வே

ஆனால் ஜிம்பாப்வேயில் மட்டுமே இதுவரை அவர் சதம் போட்டதில்லை.

4 டெஸ்ட்தான்

4 டெஸ்ட்தான்

ஜிம்பாப்வேயில் சச்சின் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

அதிபட்சம் 74தான்

அதிபட்சம் 74தான்

அதிகபட்சமாக அங்கு 74 ரன்கள் வரை எடுத்துள்ளார். அதைத் தாண்டியதில்லை.

நிறைவேற வாய்ப்பில்லை...

நிறைவேற வாய்ப்பில்லை...

இப்போதைக்கு ஜிம்பாப்வேக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்புகள் இல்லை என்பதால், இந்த ஒரு விஷயத்தை மட்டும் சச்சினால் நிறைவேற்ற முடியாது என்றே கருதப்படுகிறது.

இங்க வச்சும் சாத்திட்டோம்ல...

இங்க வச்சும் சாத்திட்டோம்ல...

ஜிம்பாப்வேக்குப் போய்த்தான் சதம் போடவில்லை சச்சின். அதேசமயம், இந்தியாவுக்கு ஜிம்பாப்வே வந்திருந்தபோது அந்த அணிக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.

ஆளுக்கு ஒரு சதம்...

ஆளுக்கு ஒரு சதம்...

டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அத்தனை நாடுகளுக்கு எதிராகவும் சதம் போட்ட சாதனைக்குரியவர் சச்சின்.

சச்சின் விட்டார்.. டிராவிட் பிடித்தார்

சச்சின் விட்டார்.. டிராவிட் பிடித்தார்

ஆனால் சச்சின் படைக்காத சாதனையை ராகுல் டிராவிட் செய்துள்ளார். அதாவது டெஸ்ட் விளையாடும் 10 அணிகளின் நாடுகளிலும் அவர் சதம் போட்டுள்ளார்.

Story first published: Friday, September 6, 2013, 17:23 [IST]
Other articles published on Sep 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+