Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'மல்லிகைப் பூவை கையில சுத்தி'... சேப்பாக்கத்தைக் கலக்கிய சாக்ஷி டோணி!

சென்னை: வர வர டோணியின் மனைவி சாக்ஷி சிங்குக்கு தனியாக பெரும் ரசிகர் கூட்டமும், சங்கமும் வந்து விடும் போலத் தெரிகிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு முறையும் அவர் ஏதாவது செய்து அனைவரையும் கவர்ந்திழுத்து விடுகிறார்.

தனது அழகான மேனரிசங்களால் ஐபிஎல் போட்டியைக் காண வரும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கும் சாக்ஷி நேற்றைய போட்டியில் சென்னை ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.

மனம் மயக்கும் மனதைக் கொள்ளை கொள்ளும் மல்லிகைப் பூவை கையில் சுற்றியபடி ஸ்டேடியத்திற்கு வந்திருந்த சாக்ஷி மீதுதான் அத்தனைப் பேரின் கண்களும்.

அப்படியே மைனர் போல

அப்படியே மைனர் போல

மைனர்கள் கையில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு சுற்றுவார்களே அதேபோல நேற்று தனது கையில் மல்லிகைப் பூவை வாங்கி சுற்றி விட்டிருந்தார் சாக்ஷி.

அடிக்கடி நுக்ர்ந்தபடி

அடிக்கடி நுக்ர்ந்தபடி

மேலும் அந்த மல்லிகைப் பூவை அடிக்கடி நுகர்ந்து பார்த்து அதன் வாசத்தை அனுபவித்தார். மல்லிகைக்கு மயங்காத மனங்கள் உண்டோ....

பூவை ரசித்த பாவை

பூவை ரசித்த பாவை

அதேபோல மல்லிகைப் பூவை அடிக்கடி தனது விரல்களால் தடவிப் பார்த்தபடியும், தனது முகத்தில் வைத்து செல்லமாக உரசியபடியும் மல்லிகையின் சுகந்தத்தை அனுபவித்தார் சாக்ஷி.

மச்சான் ஆசையை...!

மச்சான் ஆசையை...!

மல்லிகையை கையில் வைத்திருந்ததாலோ என்னவோ, டோணி பேட் செய்யும்போதெல்லாம் உற்சாகமாக ஊக்ககப்படுத்தியபடி இருந்தார் சாக்ஷி.

தாடையில் பந்து பட்டபோது துடித்தார்

தாடையில் பந்து பட்டபோது துடித்தார்

ஒருமுறை மொஹித் சர்மா வீசிய பந்தைப் பிடிக்க முயன்ற டோணிக்கு பந்து தாடையில் பட்டு விழுந்தது. இதனால் லேசான வலியால் துடித்தார் டோணி... ஆனால் அதை விட வேகமாக துடித்தார் சாக்ஷி.

கூடிய சீக்கிரமே சாக்ஷிக்கு தமிழ்நாட்டு கிரிக்கெட் மக்கள் சங்கம் வைத்து கோவில் கட்டினாலும் கட்டலாம்....!

Story first published: Wednesday, May 15, 2013, 9:10 [IST]
Other articles published on May 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+