For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அச்சச்சோ.. தோத்துட்டாங்களே...டோணி மனைவி ஏமாற்றம்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியால் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி, மைதானத்திலேயே தனது சோகத்தை முகத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியி்ல படு விறுவிறுப்பாக இருந்தது.

கடுமையாக போராடியும் சென்னை அணி இப்போட்டியில் ஜஸ்ட் மிஸ் என்ற நிலையில் வெற்றியை நழுவ விட்டு விட்டது.

போட்டியின்போது மைதானத்தில் கண்ட சில சுவாரஸ்யங்கள்...

மஞ்சளைக் கரைத்து ஊற்றி விட்டார்களோ...?

மஞ்சளைக் கரைத்து ஊற்றி விட்டார்களோ...?

மைதானத்தில் யாரோ மஞ்சளைக் கரைத்து ஊற்றி விட்டார்களோ என்று நினைக்கும் வகையில், மைதானம் முழுக்க ஒரே மஞ்சள் நிர டிரஸ்ஸாக காணப்பட்டது. சென்னை அணியின் ரசிகர்கள் போட்டு வந்த அணி யூனிபார்பின் ஜெராக்ஸ் ஆடைகள்தான் இவை.

மத்தியானத்திலிருந்த வந்த கூட்டம்

மத்தியானத்திலிருந்த வந்த கூட்டம்

போட்டி 8 மணிக்குத் தான் தொடங்கியது என்றாலும் மத்தியானம் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதனால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது.

ரசிகர்களைக் கவர்ந்த சாக்ஷி

ரசிகர்களைக் கவர்ந்த சாக்ஷி

டோணியின் மனைவி சாக்ஷிதான் அனைவரையும் கவர்ந்தார். சென்னை அணியினர் பவுலிங், பேட்டிங் செய்தபோது கை தட்டியபடியும், விக்டரி அடையாளத்தைக் காட்டியபடியும் இருந்தார். ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் சிரித்த முகமாக காணப்பட்டார்.

அச்சச்சோ.. தோத்துட்டாங்களே...

அச்சச்சோ.. தோத்துட்டாங்களே...

தனது கணவர் டோணி அதிரடியாக ஆடியபோது உற்சாகத்தின் எல்லைக்கே போய் விட்டார் சாக்ஷி. அவரது ஆட்டத்தை படு உற்சாகமாக ரசித்து கைதட்டி மகிழ்ந்தார். ஆனால் டோணி அதிரடியாக ஆடியும், கடைசி நேரத்தில் அவர் அவுட்டானதும், சென்னை அணி தோல்வியைத் தழுவியதையும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் கலந்த முகத்தைக் காட்டி ரசிகர்களின் சோகத்தில் தானும் கலந்து கொண்டார் சாக்ஷி.

டீசர்ட் விற்பனை செம ஜோர்

டீசர்ட் விற்பனை செம ஜோர்

வழக்கம் போல டீ சர்ட், தொப்பி உள்ளிட்டவற்றை விற்கும் கூட்டம் மைதானத்திற்கு வெளியே களை கட்டியிருந்தது. மைதானத்திற்கு வெளியே பிளாட்பாரத்தில் பலரும் டீசர்ட், தொப்பி உள்ளிட்டவற்றை விற்றனர். இரு அணியினரின் யூனிபார்ம் மாதிரி உடைகள் விற்பனையாகின.

ஆனால் இந்த டிரஸ் விற்பனையில் வென்றதென்னவோ சென்னை சூப்பர் கிங்ஸ்தான்..!

Story first published: Sunday, April 7, 2013, 18:05 [IST]
Other articles published on Apr 7, 2013
English summary
Sakshi, wife of captain Dhoni was highy dissappointed over the CSK's defeat despite her hubby Dhoni batted well.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+